
எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு அவர் நுழைகிறார்.
2004 பொதுத் தேர்தலில் ரத்ன தேரர் முதன் முதலில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜாதிக ஹெல உருமய கட்சியின் சார்பில் களுத்துறை மாவட்டத்தில் இருந்து போட்டியிட்டார்.
2010 ஆம் ஆண்டில், ரத்ன தேரர், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் கம்பஹா மாவட்டத்தில் இருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
அப்போதைய ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் மூலம் தேரர் 2015 இல் மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.
அதுரலிய ரத்ன தேரர் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் நான்காவது முறை உறுப்பினராவார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 224வது உறுப்பினராக அவர் பதவியேற்பார்.
மேலும் ஐ.தே.கவின் தேசியப்பட்டியல் நியமனம் இன்னும் நியமிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.