நாட்டில் கொரோனா தடுப்பூசியை வழங்கும்போது முன்னுரிமை அளிக்கப்படும் முக்கிய பிரிவினரை சுகாதார அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளதாக என அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நேற்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
1. சுகாதார பணியாளர்கள் - 155,000 (0.68%)
2. முப்படை மற்றும் காவல்துறை - 127,500 (0.56%)
3. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் - 3,159,800 (14%)
4. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கையாளும் பணியாட்கள் - 225,700 (1%)
5. நோய்களுடன் 18 - 59 வயதுக்குட்பட்டவர்கள் - 3,227,510 (14.3%)
6. 40 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் - 3,114,660 (13.8%)
155,000 - 0.68% கொண்ட முன்னணி சுகாதார ஊழியர்கள் தடுப்பூசி பெறும் முதல் குழுவாக இருப்பார்கள் என்று அவர் கூறினார்.
அதன்பிறகு, கிட்டத்தட்ட 127,500 முப்படையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தடுப்பூசி பெறுவார்கள்.
60 வயதிற்கு மேற்பட்ட சுமார் 3,159,800 நபர்கள் அடுத்ததாக தடுப்பூசி பெறுவார்கள், அதேநேரம் நாடு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இதுபோன்ற முக்கிய துறைகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 225,700 நபர்களும் தடுப்பூசி பெறுவார்கள்.
18-59 வயதுக்குட்பட்ட 3,227,510 பேர் நோயுற்றவர்களாகவும், 40-59 வயதுக்குட்பட்ட 3,114,660 நபர்களுக்கு நோய்கள் இல்லாமல் தடுப்பூசி கிடைக்கும் என்றும் அமைச்சர் வன்னியராச்சி மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 35% கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி பெற பரிந்துரைக்கப்படாததால் தடுப்பூசி பெற மாட்டார்கள்.
அரசாங்கத்தின் தேசிய தடுப்பூசி திட்டம் (NDVP) தற்போது 60% நிறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கூறினார்.
NDVP முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு 2021 ஜனவரி 12 ஆம் திகதிக்குள் உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் வசதிக்கு சமர்ப்பிக்கப்படும்.
ஃபைசர் கொரொனா தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்டால் அதைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என்று அமைச்சர் வன்னியாரச்சி மேலும் பாராளுமன்றத்திற்கு தெரிவித்தார்.
பெறப்படும் கொரொனா தடுப்பூசிகளைப் பாதுகாக்க குளிர் கொள்கலன்களைப் பெறுவதற்கு அமெரிக்கா 370,000 அமெரிக்க டாலர்களை வழங்குவதாக அவர் கூறினார்.
கொரொனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வது தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கி 5 மில்லியன் அமெரிக்க டாலர் மானியத்தையும் வழங்க உள்ளது என்று சுகாதார அமைச்சர் கூறினார்.