14 வயது சிறுமியை தவறாக நடந்துகொண்ட இரண்டு சந்தேக நபர்களை பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், சிறுமி தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்து அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சிறுமியின் தாயின் சகோதரியின் கணவர் மற்றும் அவரது சகோதரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் தெரிவித்துள்ளது.
அத்தோடு சிறுமியின் பெற்றோர் ஆராச்சிக்கட்டுவ பொலிசில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆராச்சிக்கட்டுவவில் வசிக்கும் 43 மற்றும் 50 வயதுடைய சந்தேக நபர்கள் மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.