தற்போது தரம் 13 வரையான பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை தரம் 12 வரை குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளன.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பின் பெறுபேறுகள் வெளியாகும் வரை மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டியதை கருத்திற்கொண்டே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சாதாரண தரப் பரீட்சைகள் தரம் 10இல் நடாத்தப்படுவதோடு உயர் தரப் பரீட்சைகள் தரம் 12இல் நடாத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தொிவிக்கின்றன.
இதேவேளை, இப்பரீட்சைகளின் பெறுபேறுகள் யாவும் ஒரு மாத காலத்திற்குள் மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகின்றது.