பாடசாலைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வரை குறித்த பாடசாலைகளுக்கு கிருமி தொற்று நீக்கும் திரவம் உட்பட சுகாதார வசதிகள் எவையும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
$ads={2}
பாடசாலைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமை தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் அச்சநிலைமைக்கு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமாயின் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கல்வி அமைச்சு பொறுப்புக் கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.