கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் முதல் 10 நாட்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என ஆரம்ப வைத்திய சேவை, தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
முதல் 10 நாட்கள் கொரோனா பரப்புவதற்கான ஆபத்து அதிகமாக இருப்பதால், வைரஸின் பரவலையும் அதன் இடத்தையையும் துல்லியமாக கண்டறிந்து சிகிச்சையளிப்பது முக்கியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய அறிவியல் உத்திகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நோயாளிகளின் விடயத்தில், முதல் 10 நாட்களை ஒரு சிகிச்சை மையத்திலும், மீதமுள்ள 4 நாட்களை மருத்து கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியின் கொரோனா தடுப்பு கூட்டத்தில் தெரிவித்தார்.