ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகரசபை உறுப்பினரான குலசிங்க கீகனகே உள்ளிட்ட 10 பேரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹைல் இந்த உத்தரவினை இன்று பிறப்பித்தார்.
$ads={2}
தெமட்டகொடவில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்றைய தினம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.
இதனையடுத்து குறித்த சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் காவற்துறைக்கு உத்தரவிட்டார்.
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி இந்த மோதல் சம்பவம் இடம்பெற்ற போது, முன்னாள் அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரி மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 3 பேர் காயமடைந்ததுடன், கம்பளை - கெலி ஓயா பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.