
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உத்தியோகத்தர்கள் இருவர் அடையாளம் காணபபட்டுள்ளனர் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதனால், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாகவும் இன்று காலை அறிவித்தார்.
$ads={2}
அவர் கடந்த 05ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வில் பங்குபற்றிய நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களை கண்காணிப்பு கெமராக்கள் மூலம் அடையாளம் காண்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, ரவூப் ஹக்கீம் எம்.பியுடன் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உத்தியோகத்தர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார்.