ஏமன் நாட்டின் விமான நிலையத்தில் இன்று (30) பிற்பகல் பாரிய வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மத்திய கிழக்கு நாடான ஏமனின் புதிய ஐக்கிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சவூதியில் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட பின் யேமனுக்கு வந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
$ads={2}
அமைச்சர்கள் விமானத்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது, குறைந்தபட்சம் இரு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதாக அங்கிருந்த AFB செய்தியாளர் தெரிவித்துள்ளர்.
இச்சம்பவங்களில் பலர் காயமடைந்த எனவும் ஆனால், அரசாங்க அதிகாரிகள் எவரும் காயமடையவில்லை எனவும் AFBயிடம் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசாங்கமும், தென் பகுதி பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களும் இணைந்து புதிய அமைச்சரவையொன்றை கடந்த 18 ஆம் திகதி அமைத்தனர்.
$ads={1}
இவர்கள் கடந்த சனிக்கிழமை சவூதி அரேபியாவில் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட பின்னர் ஏமனுக்குத் திரும்பிய வேளையில் இவ்வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
ஏமனில் வட பகுதி ஹெளதி கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்துக்கு எதிராக போராடி வருகின்றனனர். குறிப்பிடத்தக்கது. தலைநகர் சனாவின் பெரும் பகுதி ஹெளதீ கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.