முஸ்லிம்களின் சடலங்களை புதைப்பதா, எரிப்பதா என்றொரு பிரச்சினை எழுந்துள்ளது. இதற்கு பிரதான காரணம் ரவூப் ஹக்கிம் மற்றும் ரிசாட் பதியுதின் ஆகியோரே என சாய்ந்தமருதை பிறப்பிடமாக கொண்ட இஸ்ஸதீன் என்ற நபர் தெரிவித்துள்ளார்.
$ads={2}
அண்மையில் ஜனாதிபதி செயலகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ரவூப் ஹக்கிம் மற்றும் ரிசாட் பதியுதின் ஆகியோர் தோல்வியுற்ற தலைவர்கள்; அவர்கள் இந்த விடயத்தை அரசியலாக்குகிறார்கள்.
மாகாணசபை தேர்தலுக்காக பொன்னம்பலமும், விக்னேஸ்வரனும் சேர்ந்து இதனை அரசியல்மயப்படுத்தி இருக்கிறார்கள்.
$ads={1}
எனவே முஸ்லிம்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், நாட்டின் சட்டத்திற்கு அடிபணியுங்கள்.
இதற்கு தேர்ச்சி பெற்ற நிபுணர் குழுவொன்று உள்ளது. அவர்கள் கூறும் வரை பொறுமையாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.