![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAPhEvZBhckN17EDkmf6ksyRHbZGB7TYSYiiG93DjZvLYdnLRY0PWNm1b9PauedUJFhTkqOMsSoMW3PqjaA8Faa8w7woyGl13LBs2CPHhyPG3Zf3ekjzX8S4rlcYk8jwqKSXmSx75-bxE/s16000/A10C877C-1E06-48A5-B1F6-93C478B04E45.jpeg)
VAS கட்டணங்கள் அறியாமல் மீள் புதுப்பிப்பது குறித்து நுகர்வோர் கேள்வி எழுப்பியுள்ளதாக டி.ஆர்.சி தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டி.ஆர்.சி விதிமுறைகளை வெளியிட்டிருந்தாலும், நுகர்வோர் அத்தகைய சேவைகளைத் தேர்வுசெய்திருப்பதை உறுதிசெய்ய குறித்த தருணத்தில் சரியாக குறித்த சேவையினை பெற்றிக்கொள்ளப்பட்டதா என சரிபார்க்கும் வசதி (OTP) கட்டாயமாக்கப்பட்ட போதிலும் சிக்கல்கள் பதிவாகியிருந்தன.
$ads={2}
எந்த நேரத்திலும் அனைத்து VAS கட்டணங்களையும் சரிபார்க்க, யு.எஸ்.எஸ்.டி / செல்கெயார் ஆப் / இணையம் மூலம் பயன்பாட்டாளருக்கு வசதியினை சேவை வழங்குனர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள VAS சேவைகளை சரிபார்க்க கிடைக்கக்கூடிய முறைகள் குறித்து நுகர்வோர் தங்களது தொடர்புடைய சேவை வழங்குநரை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
டி.ஆர்.சி மேலும் எந்தவொரு குறிப்பிடத்தக்க முரண்பாடுகளையும் பற்றி cc@trc.gov.lk வழியாக ஆணையத்தை அணுகுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியும் உள்ளது. (யாழ் நியூஸ்)