கொரோனா தொற்றினால் உயிரிழந்த நபர்களின் உடல்கள் உரிய நபர்களினால் பொறுப்பேற்கப்படாத பட்சத்தில் அவற்றை அரச செலவில் எரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் உயிரிழந்த சில நபர்களின் சடலங்கள் அரச வைத்தியசாலைகளில் ஒன்று சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
இந்நிலையில், குறித்த சடலங்களை உறவினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அவற்றை அரச செலவில் எரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த சடலங்களை சுகாதார மற்றும் சட்ட ஆலோனைகளுக்கு அமைய எரிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், இவற்றுக்கான செலவுகள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக வழங்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.