ஹொரவ்பொத்தான - அனுராதபுரம் பிரதான வீதி மஹா கனந்தராவ குளத்திற்குள் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறி விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இன்று (08) இடம்பெற்றுள்ளதாக மிகிந்தலை பொலிசார் தெரிவித்தனர்.
$ads={2}
ஹொரவபொத்தானயில் இருந்து சிலிண்டர்களை ஏற்றி வேகமாக சென்ற லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை உடைத்துக்கொண்டு குளத்துக்குள் விழுந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இவ்விபத்தினால் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் லொறியின் சாரதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மிகிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
-முஹம்மட் ஹாசில்