உலகின் மிக உயரமான இடமான எவெரஸ்ட் சிகரத்தின் உயரத்தின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளது.
பல தசாப்தங்களின் பின்னர் நேபாளமும் சீனாவும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறித்து இணப்பாட்டுக்கு வந்துள்ளன.
இணக்கம் காணப்பட்ட, எரெஸ்ட்டின் புதிய உயரம் நேபாளத் தலைநகர் காத்மண்டில் இன்று (08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.
$ads={2}
இதன்படி, எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் 8,848.86 மீற்றர்கள் (29,031 அடி) ஆகும். இது நேபாளத்தினால் முன்னர் அங்கீகரிக்கப்பட்ட எவரெஸ்ட் சிகரத்தின் முந்தைய உயர அளவைவிட 86 சென்ரிமீற்றர் (2.8 அடி) அதிகமாகும்.
அதேபோன்று சீனாவின் உத்தியோகபூர்வ தரவுகளின்படியான முந்தைய எவரெஸ்ட் உயரத்தைவிட புதிய உயரம் 4 மீற்றர்கள் அதிகமாகும்.
2015 ஆம் ஆண்டின் பாரிய பூகம்பம் உட்பட, புவித்தட்டுகளின் நகர்வுகள், எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்பட்டதையடுத்து அதன் உயரத்தை அளவிடுவதற்கு நேபாளம் தீர்மானித்தது.