மஹர சிறைச்சாலை அமைதியின்மை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் இன்று (07) பிற்பகல் குறித்த இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மஹர சிறைச்சாலை அமைதியின்மையினால் உயிரிழந்த 11 பேரில் 7 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது.
$ads={2}
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மூவரின் சடலங்கள் குறித்த பிரேதப் பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், இதுவரை அடையாளம் காணப்படாத நால்வரின் உடல்கள் தொடர்பில் மரபணு பரிசோதனை அல்லது கைவிரல் அடையாள பரிசோதனையை மெற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.