கொரோனாவின் உடல்கள் அடக்கம் செய்யப்படக் கூடாது எனக் கோரி நேற்று (28) ஜனாதிபதி செயலகம் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,
இஸ்லாமிய தீவிரவாதிகளால் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட இந்த நாட்டில்,
குறித்த சஹ்ரானின் கொள்கைகளுடன் செயற்படுபவர்கள் புதைக்கப்பட்ட கொரொனா தொற்றிய சடலங்களை தோண்டியெடுத்து நீர் நிலைகளில் கலக்கச் செய்வார்கள் என்றார்.
மேலும், இந்த விடயம் தொடர்பாக துறவிகளை வீதிக்கு இறங்க வேண்டிய நிலைக்கு தள்ளிய இந்த அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என்றும், தற்போதைய அரசாங்கத்தின் தோல்விக்கு இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் உடலை அடக்கம் செய்வதா இல்லையா என்பது அரசாங்கத்திற்கு தெரியும் என்ற விடயம் தனக்குத் தெரியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஓரே நாடு ஒரே சட்டம் என்று இருந்தால், மதத்திற்கு ஏற்றபடி சட்டங்களை மாற்றியமைக்க முடியாது, அப்படி நடந்தால், நல்லாட்சி சிறப்பாக இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.
-எம்.எம் அஹ்மட்