சூறாவளி தொடர்பில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் முன் ஏற்பாடுகளை செய்யுமாறு கிண்ணியா பிரதேச செயலாளர் முஹம்மது கனி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
நாட்டின் கிழக்கு பகுதியை ஊடறுத்து சூறாவளியொன்று கடந்து செல்லவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று (02) இந்த சூறாவளி கடந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்களை இன்று முதல் கடலுக்குச் செல்ல வேண்டாமென வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வானிலை மையத்தின் தகவலுக்கு அமைய பொதுமக்கள் சூறாவளியில் இருந்து பாதுகாக்கும் முகமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், மீனவ உபகரணங்களை (படகு, தோனி, மீன்பிடி வலை) பாதுகாத்துக் கொள்ளுமாறும், முன் ஆயத்தங்களை செய்யுமாறும், பிரதேச செயலாளர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
சூறாவளி தொடர்பாகவும், முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பாகவும் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர்க்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கிராம உத்தியோகத்தர் ஊடாக அவ்வப்போது விடுக்கப்படும் தகவல்களுக்கு அமைய செயற்படுமாறு பொதுமக்களுக்கு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.