மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் காயமடைந்து ராகம, போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களுள் இரு சிறை அதிகாரிகளும் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதில் 26 கைதிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மஹர சிறைச்சாலையின் 10 கைதிகள் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், 15 கைதிகள் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் மஹர சிறைச்சாலையில் நடந்த சம்பவம் குறித்த விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

$ads={2}