எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் பேருந்து சேவையை முழுமையாக முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இந்த விடயத்தை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
$ads={2}
இதன்படி, தூரப்பிரதேச பேருந்துகள் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் முழுமையாக முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது தினசரி வருமானத்தின் 25 வீதமான அளவை மாத்திரமே தற்போது இலங்கை போக்குவரத்து சபை பெற்றுக் கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, park and ride முறையிலான போக்குவரத்து சேவையும் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.