![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwfKD3oEbfoRanNf0IhQ9ZNzidqGAZiYDwGtJIUvoUxHYqswPr6QLpdUez_ga2zwDaDH_RnaTcZ7EhvoP6TdxB81tRArzl11Fm96DBst7iYwbAInehM6RaxYUSwBFnFmmtrr5GB0RKLU8/s16000/2020-12-28_3.png)
இலங்கையில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
தர்கா நகரை சேர்ந்த 90 வயது ஆண் கடந்த 24ஆம் திகதி, தெல்தெனிய பகுதியை சேர்ந்த 83 வயது ஆண் 28ஆம் திகதி, தெற்கு களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 57 வயது பெண் 28ஆம் திகதி, போன்ற மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, நேற்றைய நாள் முடிவில் 530 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41,603 ஆக உயர்ந்துள்ளது.