கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் இதுவரை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
$ads={2}
அத்துடன், இலவச புத்தகங்களை அச்சிடாமல், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் விற்பனைக்கான புத்தகங்களே அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், உயர்தர பாடப்புத்தகங்களை தனியாரும் அச்சிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதன் ஊடாக கல்வி வெளியீட்டுத் திணைக்களம் புத்தக விற்பனை நிலையமாக மாறி வருகிறதா எனும் கேள்வி எழுவதாகவும் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒன்லைன் மூலமான கல்வி செயற்பாடுகளில் தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் அதில் இருந்து விலக வேண்டியேற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.