2019 ஏப்ரல் 21 (உயிர்த்த ஞாயிறு தின) தாக்குதல்களின் பின்னர், கடந்த 2019 மே மாதம் 13 ஆம் திகதி மினுவாங்கொடைப் பகுதியில் பதிவான வன்முறைகளுக்கு அடித்தளமிட்டதாக நம்பப்படும் சம்பவம், பொய்யான விடயம் ஒன்றினை மையப்படுத்தியதென, அந்தச் சம்பவத்துக்கு முகம் கொடுத்ததாகக் கூறப்படும் இளம் பெளத்த பிக்கு (பயில் நிலை) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.
மினுவாங்கொடை வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் முன்வைத்த சாட்சியங்களைத் தொடர்ந்து, இவ்வாறு குறித்த பிக்கு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.
அவரது சாட்சியத்தின் ஊடாக, விசாரணை அதிகாரிகளின் சாட்சியம் மேலும் உறுதியானது. "என்னைத் தாக்கியதாகக் கூறுமாறு, எமது விகாரைக்கு வந்த ஜகத் மாமா என்னிடம் தெரிவித்தார். அதன் பேரிலேயே நான் அவ்வாறு கூறினேன்" என, இதன்போது சாட்சியம் வழங்கிய குறித்த இளம் பிக்கு தெரிவித்தார்.
$ads={2}
மினுவாங்கொடை, பொல்வத்தை எனும் கிராமத்தில் அமைந்துள்ள விகாரையில் இருந்த இளம் பிக்கு மீது, கல்லொழுவை எனும் முஸ்லிம் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் தாக்குதல் நடாத்தியதாக, குறித்த பொய்யான தகவல் பரப்பப்பட்டிருந்தது. இதன் காரணத்தினாலேயே, மினுவாங்கொடையில் வன்முறைகள் வெடித்ததாகவும், குறித்த சாட்சிகள் ஊடாகத் தெளிவாகின.
( ஐ. ஏ. காதிர் கான் )