மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை குறித்து சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் தலைமையில் முன்னெடுக்கும் விசாரணை மீது நம்பிக்கை இல்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
$ads={2}
இந்த வன்முறை குறித்து சுயாதீன விசாரணை அவசியம் என அவர் பாராளுமன்றில் உரையாற்றிய போது வலியுறுத்தியுள்ளார்.
விசாரணைகள் உண்மையை கண்டறிவதற்காக பக்கச்சார்பற்றவையாக காணப்பட வேண்டும் என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சிறைச்சாலை வன்முறையுடன் தொடர்புபட்ட ஒருவர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்றால் அது எவ்வாறு சுயாதீனமாக காணப்படும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் மஹர சிறைக்குள் பரவியதை தொடர்ந்து அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் PCR பரிசோதனை அவசியம் என வேண்டுகோள் விடுத்து அரசாங்கம் அதனை கண்டுகொள்ளாத பின்னரே இந்த வன்முறை வெடித்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான போதிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.