மொறட்டுவை எகொடஉயனவில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த 23 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
$ads={2}
பாணந்துறை - மொறட்டுவை வீதியின் எகொடஉயன பகுதியில் பொறுப்பற்ற ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரால் ஏற்படுத்தப்பட்ட இப்பயங்கர விபத்தில் குறித்த பெண்ணின் 1 வயது, 7 வயதான இரு பெண் பிள்ளைகள் உயிரிழந்திருந்தனர்.
விபத்தையடுத்து 20 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு மொரட்டுவ நீதிவான் முன் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த இளைஞரை எதிர்வரும் டிசம்பர் 18 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.