உரிய திகதியில் சாதாரண தர பரீட்சை நடத்துவதா இல்லையா குறித்து கல்வி அமைச்சின் நிலைப்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உரிய திகதியில் சாதாரண தர பரீட்சை நடத்துவதா இல்லையா குறித்து கல்வி அமைச்சின் நிலைப்பாடு!

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை உரிய திகதி நடத்தப்படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்த இறுதி தீர்மானம் இரு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (30) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை நடத்த ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த தினத்தில் பரீட்சையை நடத்துவதா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்த இறுதி தீர்மானத்தை 2 நாட்களுக்குள் எடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டால், மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராக மேலதிகமாக 6 வார காலம் வழங்கப்படும்.

அத்தோடு பரீட்சையை நடத்த புதிய திகதி அறிவிக்கப்படும்.

$ads={2}

குறித்த காலப்பகுதியில் 11ஆம் தர மாணவர்களின் பாடத் திட்டம் நிறைவு பெற்றிருக்க வேண்டும். இதற்கான விசேட நடவடிக்கை கல்வி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.