நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுரருந்த சம்பாயோ உள்ளிட்ட நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த குற்றப்பத்திரிகை, சட்டமா அதிபரினால் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (01) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறைச்சாலைக்குள் சூழ்ச்சிகளை மேற்கொண்டமை மற்றும் சட்டவிரோத பொருட்களை சிறைச்சாலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் போலியான ஆவணங்களை தயாரித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குறித்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
$ads={2}
அனுரருந்த சம்பாயோ உள்ளிட்ட நான்கு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் இரண்டு கைதிகளுக்கு எதிராக இவ்வாறு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் தொடர்பாடல் அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.