சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக வெளியாகிவரும் செய்திகளை சபாநாயகரின் அலுவலகம் நிராகரித்துள்ளது.
வழமைபோல புத்தாண்டில் பணிகளை ஆரம்பிக்கவென சபாநாயகர் நாளை வெள்ளிக்கிழமை அலுவலகத்திற்கு சமூகமளிப்பார் என்று சபாநாயகரின் அலுவலகம் இன்று (31) மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல சபாநாயகரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு தொற்று இருப்பதாக வெளியாகிய தகவலும் உண்மைக்குப் புறம்பானது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறித்த பாதுகாப்பு அதிகாரி தற்சமயம் தனிமைப்படுத்தலிலேயே ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.