பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
PCR பரிசோதனைக்கு உட்படுத்திய நபர்கள் சோதனை முடிவுகள் வெளியாவதற்கு முன்னர் வெளியில் நடமாடுவதே இதற்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நோயாளி என பின்னர் உறுதிப்படுத்தப்படக்கூடிய நபர் தொழில் நோக்கங்களிற்காகவும் வேறு நோக்கங்களுக்காகவும் பல பகுதிகளிற்கு செல்லும்போது நோய் தொற்று அதிகரிக்கும் ஆபத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நோயாளிகளை கண்டுபிடிப்பதில் பொதுசுகாதார பரிசோதகர்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர், அவர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முடியாமலுள்ளது என பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.
$ads={2}
அதிகளவில் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளையும், கொரோனா தொற்று அதிகரிக்ககூடிய பகுதிகளையும் புதிதாக தனிமைப்படுத்தியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
வத்தளை, பேலியகொடை போன்ற பகுதிகளில் தொழிற்சாலை ஊழியர்கள் வசிக்கும் விடுதிகளில் கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோதர, வனாத்தமுல்ல, கிரான்ட்பாஸ் போன்ற பகுதிகளில் பெருமளவு மக்கள் வாழும் தொடர்மாடிக் குடியிருப்புகளில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.