கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய, நிலத்தடி நீர் மட்டம் மிக ஆழத்தில் உள்ள இரு இடங்கள் தொடர்பில் பிரதமருக்கும் சுகாதார அமைச்சருக்கும் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் மறிச்சிக்கட்டி, கிழக்கின் இறக்காமம் ஆகிய பகுதிகளே நிலத்தடி நீர் மட்டம் மிக ஆழத்தில் உள்ளதாக, தமது அமைச்சின் விசேட நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதுவே பிரதமருக்கும் சுகாதார அமைச்சர்க்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
$ads={2}
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன், இம்மாதத்தின் ஆரம்பத்தில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது நிலத்தடி நீர்மட்டம் மிக ஆழத்தில் உள்ள இரு இடங்களை தேடி தமக்கு அறிவிக்குமாறு பிரதமர் நீர் வழங்கல் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியிந்தார்.
அதன்படியே இந்தப் பிரதேசங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்விரு பிரதேசங்களிலும் 30 அடி ஆழத்தில் கூட நிலத்தடி நீர் கிடைக்காது என நீர் வழங்கல் அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
-எம்.எப்.எம்.பஸீர்