கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை மேலும் தாமதப்படுத்தாமல், மார்ச் மாதம் நடத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்
மார்ச் மாதம் பரீட்சையை நடத்தி 3 மாதங்களில் அதன் பெறுபேறுகளை வெளியிடவும் தீர்மானித்துள்ளதாகவும் ஜூலை மாதம் இந்த மாணவர்களை உயர்தர வகுப்புகளுக்கு இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதேவேளை, 2020 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் (2021) மார்ச் மாதம் வெளியிட எதிர்ப்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.