பேஸ்புக் வலைத்தளத்தின் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாரம்மல மற்றும் நிட்டம்புவ பொலிஸார் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் பேஸ்புக் கணக்குகளில் ஊடுருவி சம்பந்தப்பட்ட கணக்கின் உரிமையாளர் அனுப்பும் வகையில் அவரின் நண்பர்களிடம் பணம் கோரி குறுந்தகவல் அனுப்பியுள்ளனர்.
கடன் அடிப்படையில் அவசர தேவைக்காக பணம் தேவைப்படுவதாக இவ்வாறு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்காக பயன்படுத்தப்பட்ட சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரும் நிட்டம்புவ பகுதியை சேர்ந்தவர்களாவர்.