கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியைப் பெறுவதற்கு ஹேமாஸ் மருந்து நிறுவனம் சுகாதார அமைச்சு மற்றும் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களான Pfizer மற்றும் Astrazeneca போன்ற நிறுவனங்களிடையே பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.
இலங்கையில் Pfizer மற்றும் Astrazeneca தடுப்பூசிகளின் வணிக முகவராக இருக்கும் இந்த தனியார் நிறுவனம் தடுப்பூசி பெறுவதற்கான மேலதிக ஏற்பாடுகளை கையாள முன்வந்துள்ளது.
$ads={2}
ஹேமாஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜூட் பெர்னாண்டோ, தடுப்பூசி வழங்குவதற்கு பின்பற்ற வேண்டிய சிறந்த வழிமுறை குறித்து அரசாங்கத்திற்கு ஒரு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திட வேண்டும் எனக் கூறி, கையெழுத்திட்டவுடன் மீதமுள்ள தகவல்கள் இரு தரப்பினருக்கும் இடையில் பகிரப்பட்டு என்றும் பிற காரணிகள் ஆராயப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இதில் தடுப்பூசியின் விலை, அளவு மற்றும் விநியோகிக்கும் திகதி உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இரு தரப்பினர்களிடையில் கலந்துரையாடி ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்றார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெறுவதற்காக தயாராக இருக்கும் நிறுவனம் குறித்து அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கும் என ஜூட் பெர்னாண்டோ மேலும் கூறினார்.
மேலும் ஹேமாஸ் நிறுவனம் ஒரு தனியார் அமைப்பு என்பதால் தடுப்பூசிகளை தனியாக இறக்குமதி செய்ய அதிகாரம் இல்லை என்று சுட்டிக்காட்டிய அவர், அரசுடனான ஒப்பந்தம் அனைத்தும் சரியாக இடம்பெற்றால், அடுத்த வருடம் இரண்டாம் அல்லது மூன்றாம் காலாண்டில் அரசாங்கத்துடன் சேர்ந்து தடுப்பூசியை நாட்டினுள் விநியோகிக்க முடியும் என நம்புவதாக தெரிவித்தார்.