கண்டி, கம்பளை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
இதன் காரணமாக வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட 65 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த விருந்துபசாரம் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், குறித்த வைத்தியருக்கு கடந்த 06 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கராபிடிய வைத்தியசாலையில் கல்வி பயிலும் மருத்துவ மாணவியான அவரது மனைவிக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த வைத்தியருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 21 ஆம் திகதி குறித்த வைத்தியர் தனது மனைவியை இறுதியாக சந்தித்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில்,இவ்வைத்தியசாலையின் 6,9 இலக்க வாட்தொகுதிகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவும் நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த வாட்டு தொகுதிகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் கண்டி வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

$ads={2}

மற்றும் கம்பளை தனியார் வைத்தியசாலை ஒன்றும் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியக் கிடைத்துள்ளது.