கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கவில்லை என்றால் உடல்களை பொறுப்பேற்க போவதில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
$ads={2}
முஸ்லிம் மக்கள் ஏற்கனவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். தாய், தந்தை இறந்தாலும் அடக்கம் செய்ய இடமளிக்கவில்லை என்றால் ஜனாஸாக்களை பொறுப்பேற்க போவதில்லை. அடக்கம் செய்ய இடமளிக்காவிட்டால் பிணத்தை வைத்துக் கொண்டு சாப்பிடுங்கள் என அறிவித்துள்ளோம்.
உலகில் 195 நாடுகள் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ள நிலையில், இலங்கையில் மாத்திரம் எந்த அடிப்படையில் உடல்களை தகனம் செய்கின்றனர்? இது அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவும் அசாத் சாலி சுட்டிக்காட்டினார்.