கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் முடக்கப்படாத பகுதிகள் என்பவற்றில் தொற்றாளர்கள் இனங்காணப்படும் எண்ணிக்கை தொடர்பில் வார இறுதி நாட்களில் மதிப்பிட்டு தனிமைப்படுத்தல் தொடர்பில் இவ்வார ஞாயிற்றுக்கிழமை இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
நீண்ட நாட்களாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமை மற்றும் முடக்கப்படாத பகுதிகளில் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமை என்பவற்றைக் கருத்தில் கொண்டு தனிமைப்படுத்தல் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், முடக்கப்பட்டுள்ள கிராம சேவகர் பிரிவுகளை அடுத்த வாரமளவில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
$ads={2}
அதற்கமைய ஞாயிற்றுக்கிழமை காலை தனிமைப்படுத்தல் குறித்த தீர்மானத்தை எடுக்கக் கூடியதாக இருக்கும் என்றார்.