![tholawaththa sri lanka forced cremation of muslim bodies](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZeRPpIis0GchdhqsYN8ExJ95sGJpNHDZsBNMhyknTdD7_B5Nf67xVuUFV6mQ8lqgE9uUZ6fajBd1QM3WsyILcMFPs5nbSYUU5uGUcHcyGUIwCKpmJ3I8aAloo6j6mUzzkr7j9eR9dzh0/s16000/sri+lanka+forced+cremation+of+muslim+bodies.jpg)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நேற்று (27) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் இறுதியைக் கிரியைகள் குறித்து தீர்க்கமான முடிவொன்று எட்டப்படும் வரை, உடல்களை குளிரூட்டியில் வைக்குமாறு சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த சுட்டிக்காட்டியுள்ளார்.
$ads={2}
எனினும், கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என சுகாதாரத் தரப்பு தெரிவித்துள்ள நிலையில் எவ்வாறு அவற்றை குளிரூட்டியில் வைக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், குறித்த நடவடிக்கையின் ஊடாக சுகாதாரத் தரப்பின் உத்தரவு மீறப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, உடல்களை குளிரூட்டியில் வைக்கும் விவகாரத்தில் தலையீடுகள்காணப்படுகிறதா என்பது குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், தன்னுடைய கோரிக்கையின் ஊடாக ஒரு இனத்தையோ அல்லதுமதத்தினையோ தாக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தன்னுடைய கோரிக்கையானது உயிருடன் உள்ள நபர்களை பாதுகாப்பதே தவிர உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் குறித்து கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இறுதிக் கிரியைகள் குறித்து விசேட நிபுணர்களின் இறுதித் தீர்மானம் வெளியாகும் வரை உடல்களை குளிரூட்டியில் வைக்காது அவற்றை தகனம் செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.