கனரக வாகன சாரதி உரிமத்தை வழங்கும்போது விண்ணப்பதாரர் போதைக்கு அடிமையானவரா என்பதை அடையாளம் காண மருத்துவ சான்றிதழில் ஒரு பரிசோதனையை மேலதிமாகச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை பயணிகள் போக்குவரத்து முாகமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
$ads={2}
இந்த புதிய திட்டம் விரைவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
கனரக வாகனங்களின் விபத்து அதிகரித்துள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலும் சாரதிகள் போதையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.