கொரோனா தொற்றுக்கு 14 பேர் இனம்காணப்பட்டதை அடுத்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் ஒரு வார்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஒரு வைத்தியர், ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் தொற்றுக்கு பரிசோதித்ததை அடுத்து மருத்துவமனையின் 24ஆம் வார்டு மூடப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் கொழும்பு கெஸட்டுக்கு செய்தி தெரிவித்துள்ளது.
$ads={2}
மருத்துவ வார்டில் ஒரு வைத்தியர் நேற்று (29) காலை கொரோனா தொற்றுக்கு மேற்கொண்ட PCR பரிசோதனையில் நேர்மறையானதாக தெரிவித்தனர்.
பின்னர், நேற்று பிற்பகல் வார்டில் உள்ள ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் மீது நடத்தப்பட்ட PCR பரிசோதனைகளில் 02 செவிலியர்கள், 02 சுகாதார உதவியாளர்கள் மற்றும் 09 நோயாளிகள் வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் கொரோனா சிகிச்சை ஸ்தலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் வார்டின் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.