கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மற்றும் காரைநகர் இந்துக் கல்லூரி என்பன நாளை முதல் (07) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன்படி, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு இது தொடர்பில் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
கிளிநொச்சி – தொண்டமான் நகரைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கடந்த மாதம் 23ஆம் திகதி கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, அவருடன் தொடர்புடையோரைக் கண்டறியும் வகையில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நவம்பர் 24ஆம் திகதி முதல் தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்டது.
இந்நிலையில், தரம் 06 தொடக்கம் 13 வரையான மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.