யாழில் காணாமற்போயிருந்த கடற்றொழிலாளி சடலமாகக் கண்டெடுப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழில் காணாமற்போயிருந்த கடற்றொழிலாளி சடலமாகக் கண்டெடுப்பு!

புரவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் காணாமல் போயிருந்த கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய் இரவு பொன்னாலை கடலில் தொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமற்போயிருந்த சுழிபுரம் பெரியபுலோவைச் சேர்ந்த செல்வராசா செல்வகுமார் (37) என்பவரே நேற்று (03) இரவு 8.30 மணியளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கடற்றொழிலுக்காக கடலுக்குச் சென்ற ஊரி கடற்றொழிலாளர்கள் கடலில் சடலத்தை அவதானித்து அதுதொடர்பாக கிராம சேவையாளர் மயூரனுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர் மூலம் சுழிபுரத்தில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உறவினர்களும் காரைநகர் ஊரி கடற்றொழிலாளர்களும் கடலுக்குச் சென்று சடலத்தை கரைக்குக் கொண்டுவந்தனர்.

$ads={2}

இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.