நீர்கொழும்பில் 11 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா, ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இருவரும் நீர்கொழும்பு கடோல்கலே விகாரை அருகில் வைத்து இன்று (07) காலை கைது செய்யப்பட்டதாக நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு, ஜயரத்ன மாவத்தையைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
இதன்படி, கைது செய்யப்பட்ட இருவரும் நீர்கொழும்பு கடோல்கலே பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 30 ஆயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.