நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சிலாபம் பகுதியை சேர்ந்த 66 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 30ஆம் திகதி சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
$ads={2}
அத்துடன், கொழும்பு 13 ஐ சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவர் தமது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு, உயிரிழந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் ஊடாக குறித்த இரு உயிரிழப்புகளும் கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.