ஜனாஸாக்களை எரிக்காதே! முஸ்லிம்கள் கேட்பது அவர்களின் உரிமையையே! உங்களின் அரசியலுக்காக அல்குர்ஆன் படி வாழ்ந்து மரணிக்கும் முஸ்லிமின் இறுதி, உரிமையை மறுக்க வேண்டாம்! என பாராளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி. ஆவேசமாக உரையாற்றியிருந்தார்.
இந்நிலையில், அவரது பேச்சு முஸ்லிம் சமூகத்திடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
அதேநேரம், பாராளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி.யை சந்தித்து வாழ்த்துக் கூறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தொடர்ந்தும் இதுபோன்று முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினேன்.
இதன்போது அவர், எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பேன் தெரிவித்துள்ளார்.
இத்தகவலை பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது புகப்புத்த கணக்கில் பதிவிட்டுள்ளார்.