சிறைச்சாலைகளில் காணப்பட்ட நெரிசல்களை குறைக்க பாரியளவில் கைதிகளை விடுவித்தேன்! -மைத்திரி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறைச்சாலைகளில் காணப்பட்ட நெரிசல்களை குறைக்க பாரியளவில் கைதிகளை விடுவித்தேன்! -மைத்திரி

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகளில் காணப்படும் தாமதம் காரணமாகவே சிறைச்சாலைகள் நிறைந்து காணப்படுகின்றதென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டில் குற்றங்களை குறைக்க முறையான வேலைத்திட்டம் அவசியமாகுமெனவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ளடக்கக் கூடிய தொகை தொடர்பில் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றில் பேசப்பட்டது.

சிறைச்சாலையில் காணப்படும் பாரிய நெரிசல்கள் பாரிய பிரச்சினையாகும். சிறைச்சாலைகளில் உள்ள நெரிசல்கள்தான் கைதிகளில் மனதில் விரிசல்களையும் ஏற்படுத்துகிறது.

வழக்கு விசாரணைகளில் காணப்படும் தாமதங்கள் காரணமாகவே சிறைச்சாலைகள் நிறைந்துள்ளன. அதற்கு ஒரு முறையான வேலைத்திட்டம் அவசியமாகும். நான் பாரியளவில் கைதிகளை விடுவித்திருந்தேன்.

சிறைச்சாலைகளில் காணப்பட்ட நெரிசல்களை குறைக்கவே இவ்வாறு செய்திருந்தேன். எதிர்காலத்தை அனுபவிக்க வேண்டிய இளைஞர்கள் போதைப் பொருள் குற்றச்சாட்டில் சிறைகளில் அதிகம் உள்ளனனர்.

சிறைச்சாலைகளின் சேவைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும். சிறைச்சாலைகள் திணைக்களம் வலுப்படுத்தப்பட வேண்டும்.

குற்றங்கள் அதிகரிப்பது மற்றும் சிறைச்சாலைகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பின் பிரகாரம் 2005ஆம் ஆண்டு குற்றங்களின் தலை நகராக கிளாஸ்கோ நகரம் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

$ads={2}

சிறைச்சாலைகளிலேயே குற்றவாளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டமையால் காலம் செல்ல செல்ல குற்றங்கள் குறைந்துள்ளன.

ஆகவே, இவ்வாறு அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகளில் குற்றங்கள் எவ்வாறு குறைந்துள்ளன என்பதை பார்த்து நாம் எமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.