ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் தாயார் உட்பட 04 பேரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.ஏ றிஸ்வான் நேற்று (07) உத்தரவிட்டார்.
கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற சஹ்ரான் தலைமையில் இடம்பெற்ற மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது ஆசாத் என அடையாளம் காணப்பட்டதையடுத்து அவரின் தாயாரான அலியார் லதீபா பிவி என்பவர் கைது செய்யப்பட்டார்.
$ads={2}
அதேவேளை, இதனுடன் தொடர்புபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளனர்
இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று எடுக்கப்பட்டபோது கொரோனா தொற்று காரணமாக நீதிமன்றத்துக்கு அழைத்து வரமுடியாத காரணத்தையிட்டு சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நீதவான் ஏ.சி.ஏ றிஸ்வான் அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.