திருச்சியை சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் கட்டிட காண்டிராக்டராக தொழில் செய்து வந்துள்ளார்.
இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் அகிலா (20) பிரீத்தி (17) என இரு மகள்களும் இருந்தனர்.
சில ஆடுகளுக்கு முன்பு அருண்பாண்டியனுக்கு உடம்பு சரியில்லாமல் போகவே, அது தொடர்பாக மருத்துவரை நாடியுள்ளனர்.
அப்போதுதான், அவருக்கு மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்தது.
அந்த கட்டியை அகற்றினால் உயிருக்கு ஆபத்தாகி விடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதை கேள்விப்பட்டு மொத்த குடும்பமே உடைந்து போயுள்ளது.
மேலும் தகவல் அறிந்த அன்றே வளர்மதி தற்கொலைக்கு முயன்றுள்ளார், ஆனால் குடும்பத்தினர் அவரை காப்பாற்றியுள்ளனர்.
இந்நிலையில், அருண்பாண்டியன் குடும்பம் மதுரைக்கு குடிபெயர்ந்துள்ளது. அங்கு அருணுக்கு புற்றுநோய்க்கு சிகிச்சையும் நடந்துள்ளது.
அது பலனளிக்காமல் தான் கடந்த ஜூலை மாதம் உயிரிழந்துள்ளார். அருண் இறந்தபிறகு வளர்மதி பித்து பிடித்தது போல இருந்திருக்கிறார்.
இதனையடுத்தே, மகள்களுடன் தற்கொலைக்கு முடிவு செய்துள்ளார் வளர்மதி. முதலில் மணிக்கட்டை அறுத்துக் கொண்டுள்ளனர்.
ஆனால் அப்படியும் உயிர் போகவில்லை என்றதும், சேலையில் ஒரே நேரத்தில் 3 பேரும் தூக்கில் தொங்கி உள்ளனர்.
மேலும், தாங்கள் வளர்த்த நாய்க்கு சாப்பாட்டில் விஷம் வைத்ததுடன், அதன் கழுத்தையும் நெரித்தே கொன்றார்களாம்.
அதன்பிறகுதான் இவர்கள் கடிதம் ஒன்றை எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இவர்கள் 3 பேருமே ஏற்கனவே ஒருமுறை தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து தூக்க மாத்திரையை சாப்பிட்டுள்ளனர்.
அப்போதும் உறவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். அப்பா இல்லாமல் இருக்கவே முடியவிலை என்று அந்த பெண்கள் அழுது கொண்டே சொல்வார்களாம்.
தற்போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, சாமி அறைக்கு சென்று தாயும், 2 மகள்களும் பூஜை செய்துள்ளனர்.
பிறகு, தங்கள் குடும்ப போட்டோவை எடுத்து வந்து அதேசாமி அறையில் வைத்து அதற்கு பூ, பொட்டு வைத்து பூஜை செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.
-இந்திய ஊடகம்