ஒரு பிள்ளையை பாடசாலையில் அனுமதிக்க ரூ.150,000 லஞ்சம் வாங்கியதாக எம்பிலிப்பிட்டியவிலுள்ள ஒரு முன்னணிப் பாடசாலையின் பெண் அதிபர் லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
2021ஆம் ஆண்டுக்கு ஒரு பிள்ளையை தரம் ஒன்றில் சேர்க்க அதிபர் லஞ்சம் கோரியதாகக் கூறப்படுகிறது.
$ads={2}
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து அதிபர் கைதானார்.
குறித்த அதிபர் எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.