இலங்கையில் மேலும் இரண்டு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி நுவரேலியா மாவட்டத்தின் கினிக்கத்தேனை – பிளக்வோட்டர் தோட்டம் மேல் பிரிவு மற்றும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தடுகெளே தோட்டம் கீழ் பிரிவு ஆகிய பகுதிகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகளில் இதுவரை 21 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.