இலங்கை பொலிஸாரில் 10 சத வீதமானவர்கள் பாதாள உலகக் குழு மற்றும் போதைப் பொருள் விற்பனையுடன் தொடர்பு வைத்திருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அத்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
$ads={2}
குறித்த பொலிஸாரை பொலிஸ் துறையில் இருந்து விரட்டியடிப்பது தனது பொறுப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் சுமார் 8,000 பொலிஸார் பாதாள உலகக் குழு மற்றும் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டிருப்பதாக சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.
இந்த பொலிஸ் அதிகாரிகளை விரட்டியடிக்க அவர்களது உறவினர்கள், பிள்ளைகளின் வங்கிக் கணக்குகள் சோதனை செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உயர் பொலிஸ் அதிகாரிகளை விட்டு கீழ் நிலை பொலிஸாரிடம் மாத்திரம் நடவடிக்கை எடுப்பதால் இந்த நிலைமையை மாற்றி அமைக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.