அனைத்து சுற்றுலா விடுதிகளும் நாளை (05) முதல் மீண்டும் திறக்கப்படும் என வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக முடப்பட்டிருக்கும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழு உள்ள அனைத்து சுற்றுலா விடுதிகளும் திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த திணைக்களத்தின் கீழ் செயற்படும் அனைத்து விடுதிச் செயற்பாடுகள் மற்றும் சுற்றுலா, முகாம்கள் அமைத்து தங்கும் சுற்றுலா நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் மீண்டும் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என வனவள ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.